நான் ரசித்த புத்தகங்கள்-1
புத்தகங்கள் மனித பிறவிகள் அல்ல ஆனால் அவை என்றென்றும் உயிருடன் இருக்கின்றன - பென்னட்
" வாழ்க்கை நமக்காக ஆயிரம் ஆச்சரியங்களையும்,சந்தோசங்களையும் தனக்குள்ளே ஆழ புதைத்துள்ளது. என்ன அவற்றை நாம் சந்திக்க வெகு தூரம் பயணிக்க வேண்டியிருக்கிறது. சிறிய வலிகளினால் நாம் பயணத்தை தொடர தயங்கினாலோ, வருந்தினாலோ பல அற்புதமான அனுபவங்களை நிச்சயமாக இழக்க நேரிடும்"
கடந்த ஒரு மாசத்துக்கும் மேல இது தாங்க என் மனசுல நிறைஞ்சுருகிற வாசகம்…நா ஏற்கனவே சொன்ன மாதிரி என்னோட அனுபவங்கள பகிர்ந்துக்க மட்டுமே இந்த வலைபூனு ம்….ம் இப்ப கூட அப்பிடிதான் நா படித்த ஒரு அற்புதமான அனுபவத்த உங்களுக்கு அறிமுகப்படுத்த விரும்புறேன்!
எனக்கு என்ன விட வயது முத்த நண்பர்கள் தான் அதிகம் அது எனக்கு ரொம்ப நல்ல விஷயங்களா தான் அமைஞ்சுருக்கு அப்புடி என்னோட நண்பர்கள்ல ஒருத்தர் திரு.பிரசாத் நான் வியந்த மனிதர்கள்ல அவரும் ஒருத்தர். ( “என் ப்ளாக் டைட்டில் கீழ் உள்ள வாசகத்தை ஒரு முறை படிக்கவும் " )அவருக்கு புத்தகங்கள் மேலையும் திரைப்படங்கள் மேலையும் இருக்கிற காதல் எனக்கும் ஓட்டிக்க ஆரம்பிச்சுடுச்சுனு தான் சொல்லணும்.நா ஒன்னாவது படிக்கும் போது என் மீனாக்ஷி ஆச்சி (என் அப்பாவோட அம்மா )அறிமுகப்படுத்தி வச்ச சிறுவர் மலர்ல தொடங்கிய என் வாசிப்பு பழக்கம் இப்பதன் கிளை விரித்து வளர ஆரம்பிச்சிருக்கு.செப்டம்பர் தொடக்கதில ஒரு நாள் இரவு உணவுக்கு பிறகு அவர் வீட்டுல சும்மா உட்கார்ந்து கதையடிச்சுட்டு இருந்தப்ப அவர் எனக்கு குடுத்த புத்தகம் தான் பாலச்சந்திரன் சுள்ளிக்காடு என்பவரின் “சிதம்பர நினைவுகள் " தமிழ் மொழிபெயர்க்கப்பட்ட நூல் மொழி பெயர்த்தவர் திருமதி-கே.வி.ஷைலஜா
(வெளியிடு-வம்சி பதிப்பகம்)
முகவரி-
19 .டி.எம்.சரோன்,
திருவண்ணாமலை
தொலைபேசி-04175 -238826
பாலச்சந்திரன் சுள்ளிக்காடு அவர்களின் சிதம்பர நினைவுகள் சிறுகதை தொகுப்பு இந்த புத்தகம் தான் நா மேல சொன்ன வாழ்கைய பத்தி ஒரு அற்புதமான புரிதல எனக்கு உண்டாக்குச்சு படிச்ச பிறகு நிச்சயம் உங்களுக்கும் அப்படி ஒரு உணர்வு ஏற்படும்»»»
ஒரு மனிதன் தன்னோட வாழ்கையின் பல்வேறு காலகட்டங்கள்ல நடந்த நினைவுகள உள்ளது உள்ளபடியே மறைக்காம திறந்த மனதோட எழுதுறதுக்கு ஒரு மிகப்பெரிய தைரியம் வேணும். அதையும் சுவாரசியமா கதை பாணியில சொல்ற விதம் நமக்கெல்லாம் நம்பிக்கைதர கூடிய அனுபவம். அத மலையாளத்திலிருந்து தமிழுக்கு நல்ல படியா மொழிபெயர்த்து தந்த திருமதி கே.வி.ஷைலஜா அவர்களுக்கும் நன்றிய சொல்லிக்கிறேன்.
அதுல என்ன பாதிச்ச ஒரு கதைய இங்க போஸ்ட் பண்ணிருக்கேன் படிங்க கமெண்ட்ஸ் எழுதுங்க!!!!!!!!!!!
சிதம்பர நினைவுகள் -முதல் கதை
சிதம்பரம் கோவிலுக்குள் நான் அடி எடுத்து வைத்த போது நேரம் இரவாகியிருந்தது . பக்தர்கள் எல்லோரும் கலைந்து போயிருந்தார்கள். கோவில் கதவுகள் மூடும் நேரமாகிவிட்டது. விசாலமான கருங்கல் தளங்களிலும், கல்தூண்களுக் கிடையிலுமாகப் பிச்சைக்காரர்களும் , தீர்த்த யாத்ரிகர்களும் உறங்கப்போகும் ஆயுதத்தில் இருந்தார்கள்.
துணி முட்டையைத் தரையில் வைத்து ஒரு தூணில் சாய்ந்து நான் உட்கார்ந்தேன். தஞ்சாவூரிலிருந்து கும்பகோணம் வழியாக… சீர்காழி வழியாக… நடந்து நடந்து…அப்பா எவ்வளவு தூரம்! எவ்வளவு களைப்பு ! கால் மடித்து உட்கார்ந்தபோது ஆசுவாசமாக இருந்தது.
சிதம்பரம் கோவிலின் உச்சியிலிருந்து எட்டிப் பார்த்த நிலா, சுடுகாட்டு சாம்பலென வெளிச்சத்தை உமிழ்ந்துகொண்டிருந்தது . அந்த அமானுஷ்ய அமைதியில் நடராஜ மூர்த்தியின் உற்சவச் சிலை என்னைச் சுற்றி நர்த்தனமாடியது . கோவிலின் உட்புறம் ஏதோ ஒரு மூலையில் ஏகாந்தமாய் . ஒலித்த காண்டா மணியின் சப்தம் இரவின் சூன்யத்தில் லயித்தது
எனக்குக் கொஞ்சம் பக்கத்தில் தூண்களுக்கிடயில் வயதான ஒரு பெரியவரும், மூதாட்டியும் உட்கார்ந்திருந்தார்கள். அலுமினியப் பாத்திரத்திலிருந்து சோறு அள்ளி, நடுங்கும் கரங்கள் கொண்டு மனைவிக்கு ஊட்டிவிட்டுகொண்டிருந்தார் அந்தப் பெரியவர்.
உலகம் சுற்றிப் பார்க்கக் கிளம்பிய சித்தார்த்த ராஜகுமாரன் சாரதியிடம் கேட்கிறான்.
“சாரதி, என்ன இது?”
“ராஜகுமாரா, இதுதான் வயோதிகம். மனிதனின் கடைசி நிலை .”
ராஜகுமாரன் அதிர்ந்தவனாய் மீண்டும் கேட்கிறான்.
“அப்போது எனக்கும் இந்த நிலைதானா?”
“நிச்சயமாய் ராஜகுமாரா. உங்களுடைய கடைசிக் காலமும் இப்படித்தான் இருக்கும்.”
இதைக் கேட்ட ராஜகுமாரன் தளர்வுற்றன். மனிதனின் கடைசிநிலையை அறிந்து துக்கதிலாழ்ந்தான் , சித்தார்த்த ராஜகுமாரன்.
அம்மா எனக்குச் சொல்லிக்கொடுத்த கதை இது. அம்மாவைப் பார்த்து எத்தனையோ வருடங்களாய்விட்டது.
எங்கோ ஒரு கிராமத்தில், சின்ன வீட்டில், இருண்ட அறையின் மூலையில், விதவையாய், வயதானவளாய், நோயாளியாய், வறுமையில் உழன்றவளாய்… என்ன செய்வாள் இப்போது?
தூங்கியிருப்போளோ? தூக்கம் வராமல் புரண்டு கொண்டிருப்பாளோ? என்னை நினைத்துக்கொண்டிருப்பாளோ? கண்கள் பனித்தன எனக்கு.
முதியவர் அந்த அம்மாவின் கையைப் பிடித்துக் கோவில் குளத்தில் இறங்கினார். குனிந்து…மெல்ல மெல்ல…நிலவொளியில்.வெள்ளைப் புடவையணிந்த ஆவிகளைப் போலத் தெரிந்தது எனக்கு.
ஒருவேளை, சில வருடங்களுக்குப் பிறகு நானும் என் மனைவியும் இது போல ஏதோ ஒரு கோவிலின் வாசலிலோ குளத்தின் படித்துறையிலோ, நடக்க முடியாமல், கடைத் திண்ணையிலோ , தெருவோர மரநிழழிலோ சோர்ந்திருப்போமோ?
நினைத்து, நினைத்து நான் தூங்கிப்போனேன் .
தொடந்து ஒலித்த மணி ஓசைகளும், சங்கீத ஆராதனைகளிலும், என்னை
எழுப்பின, அதிகாலை அழகாகப் புலர்ந்து கொண்டிருந்தது. பக்த கூட்டம் வர
ஆரம்பித்திருந்தது.
சிதம்பரம் கோவிலைப் பற்றி எத்தனையோ கதைகள் கேள்விப் பட்டிருக்கிறேன். படங்கள் பார்த்திருக்கிறேன். சிற்பக் கலையின் அதி அற்புதமான நடராஜ விக்ரகம். வாஸ்து கலையின் உன்னதன்களாய் நிற்கும் கோவில் மதில்கள், நர்த்தனக் கலையின் நூற்றியெட்டு கரணங்களும் செதுக்கப்பட்ட கோபுரங்கள்.
எல்லாவற்றையும் பார்த்து முடிக்கப் பல நாட்களாகும். பல நாட்கள் தங்கிப்பார்க்க அவ்வளவு பணம் இல்லை. பிச்சை எடுக்க வேண்டியிருக்கும். பரவாயில்லை, பிச்சை எடுத்தாவது எல்லாவற்றையும் பார்க்கவேண்டும்.
கோவில் குளத்தில் கூட்டமில்லாத மூலையில்,உடல்நிலை சரியில்லாத குழந்தைக்குத் தாய் பரிவோடு செய்யும் உபசாரமாய் முதியவளின் முகம் கழுவிக் கொண்டிருந்தார் முதியவர்.
எனக்கு மனசு கரைந்தது. துக்கத்தில் உடைந்துபோனேன் நான்.
சம்போ மகாதேவா
ஒரு குரல் என்னை அதிர வைத்தது. சுடலைச் சாம்பலை முகத்தில் பூசி, ஜடாமுடியும், தடியுமகக் கையில் சூலம் ஏந்திய ஒரு சந்நியாசியின் குரலாக இருந்தது அது.
கோவிலை ஒரு வலம் வந்து, மீண்டும், ஒரு கருங்கல் தளத்தில் உட்கார்ந்தேன். முதியவர் இப்போது வாழை இலைக் கீறலில் இருந்து இட்லியை பிட்டு மனைவிக்கு ஊட்டிக்கொண்டிருந்தார். நடராஜ விக்ரகத்தின் முன்னால் நிற்கும்போதும், சிற்பங்களை ரசித்தபடி நடக்கும்போதும், என் மனம் அதிலெல்லாம் லயிக்கவில்லை. அந்த முதிய தம்பதிகளின் உறைந்துபோயிருக்கும் அன்பையும், பிரியத்தையும் நினைத்தபடி கோவில் தளங்களில் அலைந்து கொண்டிருந்தேன் நான். அப்படி அலைந்தபோது பலமுறை நான் அவர்களைப் பார்த்தேன். சில நேரம் ஏதாவதொரு சன்னதியில் வணங்கிக் கொண்டும் சில நேரம் கட்டிடத்தினடியில் விழுந்திருக்கும் நிழலில் நிசப்தமாய் நின்றுகொண்டும் சில நேரம் கல்தூண்களுகிடையில் உட்கார்ந்தது ஏதேதோ பேசிக்கொண்டும் இணைபிரியாமல் அடி வைத்து அடி வைத்து நடந்துகொண்டும் இருப்பதைப் பார்த்தேன்.
கோவில் வாசலிலிருந்து நான் கொஞ்சம் பழம் வாங்கினேன். அந்த முதியவர்களிடம் பேச ஆசை வந்தது எனக்கு.
கல் தூணில் சாய்ந்து, கால் நீட்டி உட்கார்ந்திருந்தார் பெரியவர். அவருடைய மடியில் தலை வைத்து அந்த அம்மா படுத்திருந்தாள். அவளுடைய வெள்ளி முடி இழைகளில் பிரியம் மீதுர விரலோட்டிக் கொண்டிருந்தார் அந்தப் பெரியவர்.
பக்கத்தில் போன நான் சன்னமாய் இருமினேன். அந்த அம்மா மெல்ல எழுந்தாள். பெரியவர் தலையுயர்த்தி என்னை பார்த்தார்.
சாந்தமான முகங்கள். வாழ்வின் எல்லாச் சம்பவங்களையும் எதிர்கொண்ட கண்கள், தலைமுடியும், புருவமும், கண் இமைகளும்கூட நரைத்திருந்தன . வெளுத்து மெலிந்த உடம்பு, பழையதானதால் பழுப்பேறிய வெள்ளைப் பருத்தி ஆடைகள்.
நான் அந்த முதியவரை ஆதரவாய் நோக்கிப் புன்னைகைத்துப் பழங்களை நீட்டினேன். குழந்தையைப்போல வெள்ளையாய்ச் சிரித்த அவர். அதை இருகைகளும் நீட்டி வாங்கினார். ஏதும் புரியாத முதியவள் என்னையும் கணவனையும் மாறிமாறிப் பார்த்தாள்.
நேரம் மத்தியானமாயிருந்ததது . மணிகளின் சப்தங்களும் கீர்த்தனைகளின் ஒலிகளும் தேய்ந்தடங்கியிருந்தன . காற்றின் பாடல் மட்டுமே கேட்டுகொண்டிருந்தது. வில்வத்தில் கற்பூரத்தின், விபூதியின் சிவமணம் சூன்யத்தில் எங்கும் நிறைந்திருந்தது.
மெல்லிய குரலில் தழிலும், ஆங்கிலமும் கலந்து, இற்று ,பதில் அறுபடும் நினைவுகளிருந்து கோர்த்துக் கோர்த்து முதியவர் பேச ஆரம்பித்தார். நினைவுகள் கார்மேகங்களாய் வழி மறைக்கும் போது அவர் ஒன்றும் பேசாமல் கண்முடி மௌனமானார் நான் ஒரு குழந்தையைப்போல அவரிடமிருந்து கேட்கும் அவளோடு அமர்ந்திருந்தேன்.
முதியவர் சொல்லிக்கொண்டிருந்தது, வாழ்வின் எத்தனையோ பரிணாமங்களில் ஒன்றாயிருந்தது. மனித வாழ்வின் எல்லாம் கடமைகளையும் நிறைவேற்றிய பின், குற்ற மனப்பான்மை இல்லாமல், ஆற்றாமை இல்லாமல், பகை இல்லாமல், குறை இல்லாமல், சுய பச்சாதாபம் இல்லாமல், எழுபத்திரண்டு வருடங்கள் ஒன்றாய் வாழ்ந்த இரண்டு மனித ஜீவிகளின் ஆத்ம கதை.
இந்த நுற்றாண்டின் தொடக்கக் காலம் . தமிழ்நாட்டின் திண்டுக்கலில் சாதுவும், எழையும், விதவையுமான ஒரு பிராமணப் பெண் இருந்தாள். அப்பளம் இட்டு விற்பது அவளுடைய தொழில். அதில்வரும் வருமானம் கொண்டு தன் ஒரே மகனான ரங்கசாமியைப் பள்ளிக்கூடத்திற்க்கு அனுப்பிப் படிக்கவைத்தாள். ஏழாம் வகுப்பு பாஸானபோது ரங்கசமிக்குத் தபால் துறையில் வேலை கிடைத்தது. அப்பளம் இடுவதில் ரங்கசாமியின் தாயாருக்கு உதவ, அனாதையும், துரத்துச் சொந்தமுமான ஒரு பெண் வந்து சேர்ந்தாள், அவள் பெயர் கனகாம்பாள், சர்க்கார் உத்யோகத்திலிருக்கும் ரங்கசமிக்குப் பல இடங்களில் இருந்தும் திருமண யோசனைகள் வந்து கொண்டிருந்தன. நிறைய சீதனமும், ஆடம்பரமான திருமணமும் செய்வதை உறுதி அளிக்கப்பட்டது. அனால் அம்மா ரங்கசாமியிடம் தீர்மானமாய் இப்படி சொல்லியிருந்தாள்.
“ரங்கா, நாம் எழைகள். எளிமையான பந்தம்தான் நமக்கு நல்லது. இந்த கனகம்பாளுக்கு யாருமில்லை. இவளுக்கு நீ தான் துணை”
கல்யாணம் நடக்கும்போது ரங்கசாமிக்கு வயது பத்தொன்பது. கனகம்பாளுக்குப் பதிமுன்று. தபால் ஆபிஸ் காரனான ரங்கசாமியும் அப்பளம் இடும் கனகம்பாளும் அப்படி தங்கள் ஜீவிதத்தை ஆரம்பித்தார்கள். அவர்களுக்கு ஆறு குழந்தைகள் பிறந்தன. இரண்டு பிள்ளைகள் சிறு வயதிலேயே இறந்து போக இரண்டு ஆணும் இரண்டு பெண்ணும் இப்போதும் இருக்கிறார்கள்.
பாங்க் மேனேஜராயிருந்த ஒரு மகன் ரிடையர்மெண்டாகி, பென்ஷனும், பிள்ளைகளுமாக சென்னையிலிருக்கிறான். இன்னொரு மகன் பம்பாயில் சார்ட்டர்டு அக்கௌண்ட்டண்டாக இருக்கிறான்.பெண் பிள்ளைகள் இரண்டு பெரும் ஹைதராபாத்திலும். கோயம்புத்துரிலும் நன்றாக இருக்கிறார்கள். ரங்கசாமியின் நாலு பிள்ளைகளும் பேரப்பிள்ளைகள் எடுத்து, நல்ல நிலையில் இருக்கிறார்கள்.
பிள்ளைகளிடம் போய், அவர்களுக்குப் பாரமாய் வாழ ரங்கசாமியும், கனகம்பாளும் தயாராக இல்லை, எல்லா மாதமும் மிகச்சரியாகச் சிதம்பரம் போஸ்டாபீஷில் ரங்கசாமியின் பென்ஷன் வந்துவிடும். கோவிலில் வாழும் எளிய வாழ்க்கைக்கு அது தாராளம். அவசியமேற்பட்டால், தந்தி அடித்தால் பிள்ளைகளும் பேரப் பிள்ளைகளும் பறந்து வந்துவிடுவார்கள். ஆனாலும் யாரையும் தொந்தரவு செய்யாமல் நடராஜ மூர்த்தி ஆனந்தத்
தாண்டவமாடும் புண்ணிய பூமியில் தேகம் சாய வேண்டும் என்பதுதான் மோகம். எல்லாம் நடராஜனின் அனுக்ரகம்.
இந்த ஆத்ம கதையின் எதோ ஒரு பகுதியில், என் கண்கள் நிறைந்து வழியத் தொடங்கியிருப்பதை நான் உணரவில்லை.கண்ணீர் திரையிட்டு,கல் தூண்களும்,சிற்பங்களும், நடராஜ விக்கிரகமும், சிதம்பர கோபுரமும் மறைந்துபோயின, கண்ணீர் பெருகிப் பெருகி பிரவகமாயின.
புன்னியதலங்களும், தெய்வங்களும், மனிதர்களும் பிரவாகத்தில் முழுகிக் கானாமல்போனர்கள், வேதங்களும் இதிகாசங்களும் , புராணங்களும், ஆதியும் அந்தமும் இல்லாத பிரளயத்தில் முழுகிப் போனது.
நான் இப்போது நினைத்துப் பார்க்கிறேன், பிரியத்தில் பின்னிப் பிணைந்து, குழந்தைகளைப் போல அடி வைத்து நடக்கும் அந்த முதிர்ந்த தம்பதிகளில், யார் முதலில் இறந்து போயிருப்பார்கள்?
ரங்கசாமியா_?_
கனகாம்பாளா_?_
நன்றி-பாலச்சந்திரன் சுள்ளிக்காடு என்பவரின் “சிதம்பர நினைவுகள் " தமிழ் மொழிபெயர்க்கப்பட்ட நூல் மொழி பெயர்த்தவர் திருமதி-கே.வி.ஷைலஜா
Balachandran Chullikkadu (Malayalam: ബാലചന്ദ്രന് ചുള്ളിക്കാട്) (born 30 July 1957) is a renowned Malayalam poet from Kerala, India.
Early life
He was born in Paravur, Ernakulam, Kerala. He completed his graduation in English literature from Maharajas College, Ernakulam.
Writing career
His collection of poems published are “Pathinettu kavithakal”, “Amaavaasi”, “Ghazal”, “Maanasaantharam”, “Dracula” etc. A collection of his complete poems, Balachandran Chullikkadinte Kavithakal (The Poems of Balachandran Chullikkad) (2000) was published by DC Books, Kottayam, Kerala, India. They have also published the book of his memmoirs, Chidambarasmarana (2001). He married the Malayalam poetess Vijayalaksmi. He participated in many national literary seminars organised by Central Academy of Letters, India. He was one among the ten members of a cultural delegation of India to Sweden in 1997 invited by Nobel academy and Swedish writers union. He represented Indian poetry in the international bookfair in Gotenborg, Sweden in November 1997.In 2000 he took Buddhism as hi own religion.[1] He is also an actor in Malayalam films and serials.[2]