MVR Infortainer

போட்டி-1 முடிந்தது....-யார் கொடுத்த பேட்டி இது?

(பரிசு போட்டி-கடைசி தேதி-அக்டோபர்-31-2010)

ஒவ்வொரு மாதமும் ஒவ்வொருத்தருக்கு பரிசு!!!!!!!!! 

சின்ன வயசில் இருந்தே பரிசுகள் மேல எனக்கு ஒரு கண்ணு!!!!!!!!!!! பரிசுகள பத்தி நா அடிக்கடி என்னோட முதன் முதலாய் நிகழ்ச்சி படபிடிப்புல கலந்துக்குற ஆளுமைகள் கிட்ட இப்படி சொல்றது உண்டு **"**கொடுக்கப்படும் பரிசின் மதிப்பின் காரணமாக இல்லாமல் அந்த பரிசை கொடுத்த நபரின் காரணமாக மதிப்பற்றதாக அமையறது, நீங்க பொக்கிஷமா பாதுகாக்கிற எதாவது விஷயம் இருக்கா? அப்படினுதான் கேட்பேன் பரிசுக்கான இலக்கணம் அப்புடின்னு நா நெனைக்குறது இத தான், இந்த கருத்து பொதுவா நமக்கு நம்மோட உறவினர் நண்பர்கள்கிட்டே இருந்து கிடைக்கிற பரிசுகளுக்கு பொருந்தும். 

ஆனா எல்லாரும விரும்புற பரிசுகள் போட்டில கிடைக்கிறது தான் அது பள்ளிக்காலம் தொடங்கி நம்ம வயது எவ்ளோ ஏறினாலும் எங்கேயோ நடக்கிற போட்டிகள சந்திக்க நேரும் போதோ இல்ல ஊடகங்கள் நடத்துற போட்டிகள பார்க்கும் போதோ பெரும்பாலானோர் மனசுல உண்டாகுற ஒரு உற்சாகத்தையும் சந்தோசத்தையும் வேற எந்த விஷயங்களும் நிச்சயமாய் தர முடியாது. அந்த போட்டியில வெற்றி தோல்வி அது ரெண்டாவது விஷயம் தான், பங்கேற்க்கனும்கிற ஒரு ஆர்வம் இருக்கே அது தான் முக்கியம் , அது மனித இயல்பும் கூட…

என்னோட பள்ளி கல்லுரிகள இந்த பரிசுகளுக்காக நா எவ்ளோ ஏங்கியிருப்பேன் என்று எனக்கு மட்டும் தான் தெரியும். LKG டு 5 TH வரைக்கும் நா படிச்சது பாளையம்கோட்டை செந்தில் நகர்ல இருக்கிற செயின்ட் ஜோசப் மெட்ரிக் ஸ்கூல் அங்க படிக்கும் போது அடி வாங்கினது பயந்தது டி.டில ஒளிபரப்பான சக்திமானுக்காக சனிக்கிழம லீவ் போட்டது என்னோட வாழ்நாளோட கோல்டன் டேஸ் தான்… 

அங்க நா LKG படிக்கும் போது மாறுவேடப்போட்டியில கலந்துக்கிட்டேன் 

எங்க அப்பா, தாத்தா எல்லாரும் காவல்துறையில பணிபுரிந்த ஒரே காரணத்துக்காக போலீஸ் வேஷம் போட்டுவிடப்பட்டு ,அப்புடித்தான சொல்லணும். நடந்தது என்னனு எனக்கு ஞாபகம் இல்ல வசனம் பேசுறதுக்கு பதிலா ரொம்ப நேரம் அழுதேனாம், 

அதனால சாக்லேட் பரிசா கொடுத்து ஓரமா உட்கார வச்சிட்டங்கனு அது மட்டும் தான் எங்க அம்மா சொல்லி எனக்கு தெரியும் முதல் போட்டியே தோல்வில முடிந்தாலும் என் கலை பயணம் தோல்வில முடியல் UKGல டான்ஸ் 5 ஆம் வகுப்புல கிளாஸ் பெஞ்ச தலைகீழ போட்டுட்டு கப்பலேறி போயாச்சு பாட்டு டான்ஸ்க்கு atmosphereல ஸ்கேல் வச்சி ஜூனியர் ஆர்டிஸ்ட் மாதிரி perform பண்ணினது, பின்ன ஒரு முணு வருஷம் கேப். 

திருப்பி ஆறாம் வகுப்புக்கு பாளையம்கோட்டை சேவியர்ஸ் ஸ்கூல் வந்து சேர்ந்தேன் அப்புறம் 8 ஸ்டாண்டர்ட்ல எங்க அலங்கரராஜ் சார் (இவர பத்தி பின்னாடி வேற ஒரு பதிவுல விளக்கமா சொல்றேன் .அவர் ஒரு creative legend) தமிழ் அய்யா ஒரு போட்டி வச்சார் நதிய பத்தி புகழ்ந்து ஒரு புது பட பாட்டு வந்துருக்கு அத பாடுறவங்களுக்கு அஞ்சு ரூபா பரிசுன்னு சொன்ன உடனே லஞ்ச் breakla சீக்கிரம் சாப்ட்டுட்டு எங்க ஸ்கூல் பக்கம் இருக்குற அந்தோனியார் ஸ்கூல்கிட்ட ஒரு பாட்டு புக் கடை இருக்கு அங்க போய் (அந்த பாட்டு கண்டுபிடிச்சுட்டேனே) நாங்க சினிமாவ மறப்போமா ரிதம் படத்தில வர்ற தீம் தனனா நதியே நதியே பாடல் தான் அது படிச்சு மனப்பாடம் பண்ணி மத்தியானம் அவர் periodliye பாடி சாரி வாசிச்சு எப்டியோ அந்த அஞ்சு ரூபா பரிச வாங்கிட்டேன் அது தான் நம்ம ரீ- என்ட்ரி திரும்ப ஒன்பது, பத்து guest performance தான் 11 த்தல வாங்கின நாடகத்தில இயக்கி முன்னால் முதல்வர் பெண் வேடமேற்று நானே நடித்து வாங்கின இரண்டாம் பரிசு.. 

அப்புறம் சேவியர் கல்லூரில பி.காம் ல வாங்கின ஒரு ரெண்டு பரிசு இவ்ளோ தான் நா வாங்கின பரிசுகள் அதனால பரிசுக்காக பின்னாடி ஒரு தனி இயக்கமே உருவாக்கணும் என்கிற நோக்கத்தோட வளர்ந்துட்டு வர்ற நான், முதல் முயற்சியாய் இனிமேல் என்னோட வலை பூல மாதம் ஒரு போட்டியும் ஒரு பரிசும் கொடுக்க போறேன் இந்த மாத போட்டி நா படித்த ஒரு பேட்டியோட ஒரு சில உரையாடல்கள் சிலவற்ற இங்க போஸ்ட் பண்றேன் யார் கொடுத்த பேட்டி இது கண்டுபிடிங்க போட்டி முடிந்த பிறகு அந்த பேட்டி சம்பந்தமா ஒரு பெரிய பின்னுட்டம் எழுத காத்துக்கிட்டிருக்கேன். பதில் தெரியலனா இந்த பதிவோட கமெண்ட்ஸ்ல question கேளுங்க நா க்ளு தரேன் ஓகேயா……………………….. 

1.கேள்வி**:-** பெரும்பாலும் ஏன் நீங்க பேட்டி கொடுக்கிறதில ? 

பதில்**:-** நான் பேட்டி கொடுப்பதை விரும்புபவன் இல்லை பத்திரிக்கையாளர்கள் நான் அல்ல எந்த நடிகர் சொல்வதையும் அப்படியே எழுதுவதில்லை. எனக்கு நெடு நாட்களாக ஒரு சந்தேகம் இருக்கிறது எதற்காக எப்போது பார்த்தாலும் என்ன படம் நடித்தீர்கள்? யாரை உங்களுக்குப் பிடிக்கும்? என்று கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள். 

இதற்கு பதிலாக அகழ்வாய்வில் என்ன புதிதாகக் கண்டுபிடிக்கிறது? பால்வினை நோய்க்கு மற்று மருந்து கண்டுபிடிக்கப்பட்டிரிருக்கிறதா என்று கேளுங்களேன்? எனக்குப் பொருளாதாரமும் தெரியாது! கணிதமும் தெரியாது! நீங்கள் என்னிடம் கேள்வி கேட்பதைப் போலவே நானும் உங்களிடம் அதிகம் கேள்வி கேட்க விரும்புகிறேன்… 

2.கேள்வி:- மக்கள் உங்களிடம் நிறையத் தெரிந்துகொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறார்கள் அதற்காகத்தானே இந்தப் பேட்டி சந்திப்பு எல்லாமும்**?** 

பதில்**:-** அதெல்லாம் சுத்தப் பொய்! படம் ஓடாத எந்த நடிகரையாவது நீங்கள் கேள்வி கேட்கச் செல்வதுண்டா? நல்ல வேளை,எனக்குச் சில படங்கள் நன்றாக ஓடியிருக்கின்றன, விவாதத்திற்கும் உள்ளாகி இருக்கின்றன, என் படங்கள் ஓடியிருக்காவிட்டால் நீங்களும் நானும் இங்கு உட்கார்ந்து பேச வேண்டிய சந்தர்ப்பம் உருவாகி இருக்காது. 

3.கேள்வி**:-** அப்படி என்றல் யார் தான் கலைஞர்கள்**?** 

பதில்**:-** ஒன்றை தானே கற்பனை செய்து அதை ஒரு கலை வடிவமாக வெளிப்படுத்தி மற்றவர்கள் அதை பாராட்டுமாறு செய்கிறானோ அவனே. 

4.கேள்வி:- ஒரே ஒரு கடைசி கேள்வி உங்களுக்கு கடவுள் நம்பிக்கை இருக்கிறதா**?** 

பதில்**:-** இந்த பிரபஞ்சத்தைப் பார்க்கும்போது அதை உருவாக்கியவரை பற்றிய பிரமிப்பு இருக்கிறது.அந்த சக்தியை ஆராதிக்க விருப்பமிருக்கிறது.எனக்கு சாவைப் பற்றிய பயமில்லை. கடவுள் என் வாழ்க்கைக்குத் தேவையனவராக இருக்கிறார்.

சவாலுக்குத் தயாரா ????????? 

க்ளு**:-** 

நீங்கள் எதாவது பதில் சொல்ல முயற்சி செய்யுங்கள் அந்த பதிலின் தன்மையை பொறுத்து நான் நெறைய க்ளு தர காத்திருக்கிறேன்**…..** 

இந்த போட்டியின் முடிவு :- 

பத்திரிக்கையாளர்**:-**அப்படியானால் நடிப்பு ஒரு கலை இல்லையா? 

மர்லான் பிராண்டோ :- உங்கள் இதயத்தின் ஆழத்தைத் தொட்டுச் சொல்லுங்கள்.உங்களுக்கே தெரியும்.சினிமா நடிகர்கள் எவரும் கலைஞர்கள் அல்ல. 

பத்திரிக்கையாளர்**:-**முன்பெல்லாம் நீங்கள் பத்திரிக்கையாளர்களிடம் நிறைய பேசியிருக்கிறிர்களே? 

மர்லான் பிராண்டோ **:-**தவறுதான்.இதுபோல நிறைய தவறுகள் செய்திருக்கிறேன். ஆனால் இது தவறு என்று தெரிந்தவுடன் நிறுத்திவிட வேண்டுமில்லையா? தொடர்ந்து அதே செய்வது மகத்தான தவறாகிவிடதா? 

இந்த கேள்விகள் எல்லாம் அந்த நபர் கொடுத்த பேட்டியின் ஒரு பகுதி தான் முழு பேட்டியும் பதிவு செய்து உங்கள் நேரத்தை வீணாக்க விரும்பமால் (அது தான் அவரின் ஆசையும் கூட) சில முக்கியமான கேள்விகளை மட்டுமே இங்கு பகிர்ந்து கொண்டுள்ளேன். தற்பொழுதெல்லாம் ஊடகங்கள் மலிந்து விட்டன. ஆனால் 

இந்த காலத்திலும் தங்களை வெளிகாட்டி கொள்ள கண்டவற்றை பேசி சமுகத்தில் தங்களை அறியாமல் தவறான பிரச்சாரம் செய்து வருபவர்கள் மத்தியில் கிட்டத்தட்ட இருபது ஆண்டுக்கு முன்னால் இந்த பேட்டி கொடுக்கும் போது ஒரு தனி மனிதன் அதுவும் சமுகத்தின் தாக்கத்தை ஏற்படுத்தும் துறையில் நாம் இருக்கிறோம். என்பதை உணர்ந்து ஒரு அவசியமான பேட்டியை ஒரு அவசியமில்லாத காரணத்திற்காக கொடுத்து ஒரு முன்னுதாரனமாய் இருந்திருக்கிறார். 

இந்த பேட்டியை ஒரு பிரபல எழுத்தாளரின் புகழ் பெற்ற தொகுப்பில் படிக்க நேர்ந்த போது தான் இப்படி ஒரு நடிகரால் பேச முடியுமா? ஒரு நல்ல நடிகர் என்றால் இவ்வளவு பொறுப்பு வாய்ந்தவராய், விசயம் தெரிந்தவராய் இருக்க வேண்டும் போல என்பதை நான் தெரிந்து கொண்டேன். 

இதெல்லாம் தெரிந்து கொள்ளாமல், திரையில் நடித்தவர்களை எல்லாம் நாளைய தலைவர்களாய் நினைத்து வாழ்வை தொலைத்து கொண்டிருக்கும் என் சக இளைய சமுதாயத்தை நினைத்து மனம் வேதனை அடைந்ததது உண்மை. இன்னும் வருத்தம் இந்த போட்டி அறிவித்து பல நாள் கடந்தும் என்னால் முடிவு அறிவிக்க முடியவில்லை. அதற்கு எதிர்பாரமால் எனக்கு ஏற்பட்ட உடல் நலக் குறைவு இடையில் தீபாவளி விடுமுறைக்கு ஊருக்கு சென்றது. 

**(**இந்த முறை நான் ஊருக்கு சென்று திரும்பிய பிறகு எனக்குள் பல மாற்றங்கள் ,கடந்த 2009 ஜனவரி 8 காலை நான் சென்னை வந்தேன். பல கனவுகளோடு பொதுவாக தென் மாவட்டங்களில் இருந்து படித்து முடித்தவுடன் எந்த வேலையோ அது சென்னையில் பார்த்தால் தான் திருப்தி என்று இங்கு வந்து இந்த ஜன சமாதியில் ஐக்கியமாகி கரைந்து கொண்டிருப்பவர்கள் ஒரு ரகம் என்றால், இரண்டாவது ரகம் நான் தமிழ் சினிமாவில் சரித்திரம் படைப்பேன்,என்று ரெயில் ஏறுபவர்கள் தான் அதிகம். நான் இரண்டாவது ரகம், நான் பிறந்ததது சென்னைதான் தாம்பரத்தில் இன்றும் இயங்கி வரும் கிறிஸ்துதாஸ் மருத்துவமனையில் 22 வருடங்களுக்கு முன்னால் என் அம்மாச்சி குடும்பம் முழுக்க சென்னையில் வந்து குடியேறியதால் என் அம்மாவிற்கு பிரசவம் ஆனது இங்கு, ஆனால் நான் பிறந்து ஆறு மாதத்தில் திருநெல்வேலிக்கு சென்று நான் வளர்ந்தது எல்லாம் திருநெல்வேலியில் தான் இன்றளவும் நான் என் சொந்த ஊராக கருதுவதும் திருநெல்வேலியை தான், இருந்தாலும் 20 வருடங்கள் கழித்து என் வாழ்வின் இரண்டாம் பகுதியை இங்கு தான் கழிக்க போகிறேன் அதுவும் எனக்கு பிடிக்காத ஒரு சுழலில் என்று அஞ்சினாலும் சினிமா என்ற ஒரு வார்த்தைக்காக ஊரில் கல்லூரி படிக்கும் போதே யாருக்கும் கிடைக்காத அதுவும் மிக குறைந்த பத்தொன்பது வயதில் ஒரு பண்பலை வானொலி அறிவிப்பாளராக கிடைத்த அறிய வாய்ப்பை, நல்ல சம்பளத்தை விட்டு விட்டு எல்லாம் மறந்து சென்னை வந்து சினிமாவையும் மறந்து திரைப்படங்களே இல்லாத மக்கள் தொலைகாட்சியில் பணிபுரிய தொடங்கி கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் கடந்து விட்டது. இவ்வளவு நாள் அனுபவம் தனி கதை அதை வேறு ஒரு பதிவில் சொல்கிறேன். அந்த அனுபவங்கள் கற்று கொடுத்த பாடம் என்னை மீண்டும் என் ஊருக்கே செல்ல அழைக்கிறது சினிமாவில் வெற்றி பெற முடியாததால் அல்ல, உண்மை திரைப்படங்கள் என்னவென்று புரிந்து கொண்டதாலும், இணைய புரட்சியால் உலகின் எந்த மூலையில் இருந்தும் என் கலை பணியை தொடரலாம், என்ற நம்பிக்கையாலும் என் சொந்த மண்ணில் ஏதாவது 

செய்யாமல் ஓயக்கூடாது என்ற தீராத எண்ணத்தாலும் நான் திரும்ப நினைத்து அந்த நாளை எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கும் நிலைக்கு இந்த பயணம் உணர்த்தியது என் வாழ்வில் ஒரு மிகப்பெரிய மாற்றம் தான். என் தாய் வழி மாமன்கள் 5 பேர் உண்டு அதில் எல்லோரும் எனக்கு நெருக்கம் தான் அதில் எங்கள் குமரன் மாமா இந்த தீபாவளிக்கு எங்கள் ஊர் வந்திருந்தார் அவர் சொன்ன ஒரு வார்த்தை என்னை ரொம்ப உறுத்தியது " டேய் நம்ம ஊரில் வேலை வாய்ப்பை உருவாக்க வேண்டும் என்ற ஆசை நம்ம யாருக்கும் இல்ல நாம நம்ம இஷ்டத்துக்கு**,** நம்ம ஊரை மறந்து எங்க வேணாலும் உடனே கிளம்பி போய் செட்டில் ஆகிடுறோம்**"** உண்மை தான் திருநெல்வேலியில என்ன இல்ல? “திரைகடல் ஓடி திரவியம் தேடுன்னு” பெரியவங்க சொன்னது சரி தான் ஆனா தேடி அங்கேயே இருந்துருனு சொல்லல நமக்கும் அது ஆசையில்ல, ஆனாலும் ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு அப்புறம் வேற வழி இல்லாம சொந்த ஊர் மறந்து பிழைக்க வந்த ஊரிலியே கலந்துர்றோம். அந்த நிலை எனக்கும், என் பிள்ளைகளுக்கும், வந்துற கூடாதுங்குற பயத்தில பல கனவுகளோடு காத்துக்கிட்டு இருக்கிறேன். இனிமேல் பல புது பயணங்கள், சந்தோசமா அதே நேரத்தில சீரியஸ் திட்டங்களோட வாழ்கைய அனுபவிக்கனும். நல்ல விசயங்கள் ஆயிரம் இருந்தாலும் சொந்த மண்ணின் நினைவுகள் மறந்து ஆயிரம் வெற்றிகள்,பெயர்,புகழ் கிடைத்தாலும் மனதின் ஒரு ஓரத்தில் சந்தோசம் இன்றி தவித்து கொண்டிருக்கும் பலரின் வரிசையில் நானும் சேர்ந்து விடாமல் சிறிது மாற்றி யோசிக்க முயற்சிக்கிறேன்,மற்றதை பொறுத்திருந்து பார்ப்போம். பாருங்க இப்படி தான் நா எப்பவும் எதையோ பேசிக்கிட்டிருக்கும் போது இடையில வேற பக்கம் டைவேர்ட் ஆகிறேன் என்ன பண்றது சின்ன வயசில வகுப்பறையில தொடங்கின பழக்கம் போகுமா? ) 

பின் என் அலுவலகத்தில் இருந்த 5 நிகழ்ச்சி தயாரிப்பாளர்களில் ஒருவர் பனி விலகல் ஆக கடந்த வாரம் முழுக்க நான் படப்பிடிப்புக்கு சென்றதாலும் கொஞ்சம் தாமதமாகி விட்டது, நெறைய பேர் பார்த்து படித்ததோடு சரி போட்டியில் கலந்து கொள்ளவில்லை, ஆனால் முதல் பதிலே சரியாக சொல்லி வெற்றி பெற்றவர் திரு.செல்லையா முத்துசாமி அவர்கள் சரியான பதில் மற்றும் அவர் பற்றிய விவரங்கள் கிழே …… 

chelliah muthusamy / செல்லையா முத்துசாமி(அவருக்குரிய பரிசு அவரை சென்று சேர்ந்துவிடும்.) 

Hometown: சத்திரகொண்டான், திருநெல்வேலி மாவட்டம் Currently: சென்னை, தமிழ்நாடு 

Occupation: ஒளிப்பதிவாளர் 

அவர் பற்றிய விவரங்கள் அறிய " http://chelliahmuthusamy.blogspot.com/-இந்த லிங்க்-அய் காப்பி செய்து “இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரெர்” டாஸ்க் பார் இல் பேஸ்ட் செய்து தெரிந்து கொள்ளவும் " 

விடை:- 

பேட்டி கொடுத்தவர் "மர்லன் பிராண்டோ" 

மார்லன் பிராண்டோ 

மார்லன் பிராண்டோ ஒரு திரைப்பட நடிகர். த கோட்ஃபாதர் உட்பட பல படங்களில் நடித்தவர். இரு தடவை ஆஸ்கார் விருது வென்றார். அமெரிக்காவின் நெப்ரஸ்காவில் பிறந்தவர். 2004 இல் எண்பது வயதில் மரணமானார். 

( http://www.wsws.org/tamil/articles/2004/july/120704_MBrando 

http://en.wikipedia.org/wiki/Marlon_Brando 

**(இந்த லிங்க்-**அய் காப்பி செய்து "இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரெர்" டாஸ்க் பார் இல் பேஸ்ட் செய்து இந்த கட்டுரை தொடர்பான மேலும் பல செய்திகளை தெரிந்து கொள்ளவும் ) 

Marlon Brando, Jr. 

Born:April 3, 1924(1924-04-03) 

Omaha, Nebraska, U.S. 

Died July 1, 2004(2004-07-01) (aged 80) 

Los Angeles, California, U.S. 

Occupation Actor/Film director 

Years active 1944–2004 

Spouse Anna Kashfi (1957–1959) 

Movita Castaneda (1960–1962) 

Tarita Teriipia (1962–1972) 

Marlon Brando, Jr. (April 3, 1924 – July 1, 2004) was an American actor who performed

இந்த மாத போட்டி விரைவில்**»»»»>.**