'ஒரு நாள் ஒரு சந்திப்பு ...' பகுதி - 1
“இந்திய திரைப்படங்கள் பற்றிய ஆய்வு இன்னும் எத்தனை வருடங்கள் கழித்து நடந்தாலும் அதில் இவருக்கு தனி இடம் உண்டு " இப்படி தான் என் நண்பர் ஒருவர் இவரை பற்றி என்னிடம் அடிக்கடி சொல்லுவார்.
கற்பனைகள் கேமராவுக்குள் தஞ்சம் அடைய தொடங்கிய காலம் 19 ஆம் நூற்றாண்டு அதன் இறுதிப்பகுதியில் திரை ஒளிப்பதிவில், ஒரு தனி பாணியை வளர்த்தெடுக்க தொடங்கியவர் இவரின் முன்றாவது கண்களுக்குள் நுழைந்தவர்கள் உலகப்புகழ் பெற்றார்கள் விருதுகள் வாங்கி குவித்தார்கள்.
ஒருவர் தற்காலத்தில் எழுத்து, ஒளிப்பதிவு, இயக்கம், படத்தொகுப்பு என்கிற இந்த நான்கு துறைகளிலும் நல்ல அறிமுகம் உள்ளவராய் இருப்பதே அரிது. ஆனால் அதில் இருபது ஆண்டுகளுக்கு முன்னரே சாதித்தவர் இவர். இவருடைய படங்கள் வசூலில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தவில்லை என்றாலும் மக்கள் மனதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது நிதர்சனம், இயற்கையை அழகாய் திரையில் வடித்த இவர் கருத்திலும் குறை வைக்கவில்லை. விருதுகள் தாண்டி பல கலைஞர்கள் கைபிடித்து எழும்ப
விழுதுகளாய் இருந்தவர்.
கிட்டத்தட்ட 72 வயது இன்னமும் தனது 26 ஆவது படத்தை பற்றி அவர் பேச தொடங்கியது திரை துறையில் சாதிக்க நினைக்கும் ஒவ்வொருவரிடமும் இருந்தால் உலக சினிமா வரலாறு இந்திய திரைப்படங்களும், இந்திய திரைக்கலைஞர்களும் இன்றியமையாது.( அது நிச்சயமாய் நனவாகும்! அந்த காலம் வெகுதூரமில்லை என்ற நம்பிக்கை இவரை சந்தித்து விடைபெறும்போது என் மனதில் திரும்ப திரும்ப தோன்றியது)
தமிழ் சினிமாவின் பிதாமகன்களின் ஒருவராக கருதப்படும் திரு.பாலுமகேந்திரா அவர்களை பற்றி சொல்லத்தான் இந்த சின்ன முன்னுரை…..
நான் இவர் படங்கள் அதிகம் பார்த்ததில்லை. ஆனால் இவர் படங்கள் பற்றி பல பேர் சொல்ல கேள்விப்பட்டிருக்கிறேன். இப்பொழுதும் தொலைகாட்சிகளில், இவருடைய “முன்றாம் பிறை” போட்டால் கூட நகராமல் படம் பார்த்தவர்களையும் பார்த்திருக்கிறேன். நானும் அப்படி பார்த்திருக்கிறேன்.ஆம்! ஒரு கலைஞனின் படைப்பு எல்லா கால கட்டத்திலும் விரும்பப்படும் படியாக அமைவது மிக அரிது. அந்த வரிசையில் இவரின் பல படங்கள் இருப்பது இவரின் தனிச்சிறப்பு.
இன்று காலை நானும் என்னுடன் மக்கள் தொலைக்காட்சியில்
பணிபுரியும் நண்பர்கள் இருவரும் சேர்ந்து எங்கள் பத்து நிமிட கதைகள் ( இன்று பல தொலைக்காட்சியில் குறும்படங்களுக்காக ஒரு இடம் ஒதுக்கியிருக்கிறார்கள் ஆனால் முதலில் நாங்கள் தான் இப்படி ஒரு நிகழ்வை தொடங்கினோம்). நிகழ்ச்சியின் இறுதி சுற்றில் தேர்ந்தடுக்கப்படிருக்கும் படங்களில் பரிசுக்குரிய படங்களை தேர்வு செய்யும் படி கேட்க சென்னை சாலி கிராமம்,தசரதபுரம் போலீஸ் பூத் அருகில் இருக்கும் பாலுமகேந்திரா அவர்களின் “சினிமா பட்டறை"க்கு சென்றோம்.நான் இவரை சந்திப்பேன்.இவ்வளவு நேரம் உரையாடுவேன் என்றெல்லாம் நினைத்துப்பார்க்கவில்லை, ஆனால் நான் சின்ன வயதில் கண்ட கனவுகள் மட்டுமே எனக்கு இது போன்ற அறிய வாய்ப்புகளை கிடைக்கச் செய்கிறது என்பேன்.
நா எங்க அப்பாம்மா கை பிடித்து பொருட்காட்சிகளில் நடக்கத் தொடங்கிய காலங்களிலேயே அங்கே ஒலிபரப்பாகும் விளம்பர அறிவிப்புகளால் ஈர்க்கப்பட்டு அதே போல் பேச ஆரம்பித்த பழக்கம் தொடங்கி நான் வகுப்பில் பாட புத்தகத்தை வாசிக்க முதல் ஆளாக எழுவது வரை, போகிற வழியில் எல்லாம் சுவர் எழுத்துக்களை படித்துக்கொண்டே பயணித்தது வரை நான் ஒரு வானொலி தொகுப்பாளராய் ஆனதற்கும் அடித்தளம் இட்ட கனவுகள் பின் தொலைக்காட்சி துறை பணியில் இடம் பெற நினைத்தது, நடந்தது, இன்னும் திரைப்படம் நோக்கி வளர்ந்து கொண்டு இருக்கும் இந்த கனவு பயணத்தில் நான் 2009 பிப்ரவரியில் மக்கள் தொலைகாட்சியில் நுழைந்த பின் பல அருமையான சந்திப்புகள் எல்லா துறையிலும் பல மனிதர்களின் அனுபவ பகிர்வுகள். இனி என் வாழ்நாளில் நான் ஊடகம் அல்லது திரைத்துறை சார்ந்து இயங்க முடியாமல் போனால் கூட நினைத்து அசைபோடவும் ஒரு நல்ல ரசிகனாய் வாழவும் தகுதியடைய தொடங்கிவிட்டேன் என்று தான் சொல்ல வேண்டும்…
அதில் முக்கியமான நாள் இன்று.உள்ளே நுழைவதற்கு
முன்னேயே ஆயிரம் கேள்விகள் மனதில், சின்ன வயதில் இருந்தே கேள்விகள் கேட்டே பழக்கப்பட்டவன் ஆயிற்றே! முதலில் வரவேற்பறை சென்றோம் உள்ளே தகவல் சென்றதும் எங்களை அவருடைய தனி அறைக்கு அழைத்தார்.(அந்த அறை முழுக்க திரைப்படங்கள்.புத்தகங்கள், “உன் வாழ்வில் நீ நல்ல புத்தகங்களோடும், திரைப்படங்களோடும் அதிக நேரம் செலவழிக்க தொடங்கிவிட்டால் உன் வாழ்க்கை மிக அழகாகும்..”. என்ற நான் எங்கோ எப்பொழுதோ படித்த
ஒரு ஆங்கில மேற்கோள் தான் எனக்கு நினைவுக்கு வருகிறது.)
பிடல் காஸ்ட்ரோ மேல் கொண்ட அபிமானத்தால் தலையில் நிரந்தரமாய் தங்கிவிட்ட தொப்பி (நீல நிறம் ),பனி படர்ந்தது போல் அடர்ந்த வெண் தாடி,நல்ல பெரிய முக்கு கண்ணாடி,கழுத்தில் கர்ச்சிப் வைத்து ஸ்கௌட் ஷ்கால்ப் போல் ஒன்றை கட்டியிருந்தார்.அதற்குள் அவர் முகத்தை என்னால் அடையாளம் காணவே முடியவில்லை..சாய்வு நாற்காலியில் அவர் நிமிர்ந்து உட்கார்ந்திருந்தார். பொதுவாகவே நான் புகைப்படத்தில் ஒருவரை பார்ப்பத்தர்க்கும்,கான்பொளியில் பார்ப்பத்தர்க்கும்,அவரையே நேரில் பார்ப்பத்தர்க்கும் நெறைய வித்தியாசங்களை உணர்வேன், ஒரு புது பரிமானத்தில தெரிவாங்கனு கூட சொல்லலாம்.அதை இங்கேயும் உணர்ந்தேன்.
அப்பத்தான் அவர் மாணவர்களுக்கு காலை வகுப்பு முடிச்சுட்டு வந்துருந்தார், வணக்கம் சொல்லி உள்ளே நுழைந்தோம். உட்கார போன என்னை என் நண்பர் செய்கை காட்ட அந்த கம்பிர கலைஞனின் சம்மதத்திற்கு பிறகு அமர்ந்தோம். கோபக்காரர்,அப்புடி இப்பிடின்னு நெறைய பேர் சொல்லி கேள்விப்பட்டதால, அமைதியா இருந்தேன். அவர் பேசும் போது இருந்த ஒரு அமைதியும் நெருக்கமும் என்னை மடமடனு பேச வச்சுடுச்சு…
பாலுமகேந்திரா :- என்ன விசயம்?
நான்:- இந்த பத்து நிமிட கதைகள் குறும்படங்கள நிகழ்ச்சியின் இறுதி சுற்றில் தேர்ந்தடுக்கப்படிருக்கும் படங்களில் பரிசுக்குரிய படங்களை நீங்க தான் தேர்ந்தடுக்கணும்.
பாலுமகேந்திரா :- நா எதுக்குப்பா எதாவது இளம் இயக்குனர் வச்சு தேர்ந்தேடுத்துக்ககூடாதா ?
நான்:- இல்ல நீங்க தான் தேர்ந்தடுக்கணும் இது தான் எங்க எல்லோருடைய விருப்பம்.
பாலுமகேந்திரா :- சரி ஆனா இன்னிக்கு குடுத்து நாளைக்கு வேணும்னு சொன்னா
என்னால முடியாது கொஞ்சம் நேரம் வேணும்னு சொன்னார் .
நான்:- கண்டிப்பா சார், பரிசளிப்பு விழா ஞாயிற்றுக்கிழமை அதற்குள் கிடைத்தால் போதும்.
பாலுமகேந்திரா :- ம்… சரி நான் சனி,ஞாயிறு ரெண்டு நாளும் என்னோட அடுத்த பட நடிகர் தேர்வுக்காக நா திருவண்ணாமலை போறேன்,
தொடர்ந்து அவரே பேச தொடங்கினர் அவர் உதவியாளரை அழைத்து எங்களுக்கு தேநீர் கொண்டு வர சொன்னார் வந்தது “ப்ளாக் டீ” குடிப்பீர்களா என்று கேட்டார் (நான் சின்ன வயதில் இருந்தே டீ காபி எதுவும் குடிப்பதில்லை ப்ளாக் டீ குடித்த அனுபவம் இல்லை ஆனாலும் ஆம்! என்றேன் நன்றாகத் தான் இருந்தது.அவரே தொடர்ந்தார்.தன அடுத்த படத்திற்க்கான சில முக்கியமான தகவல்களை பகிர்ந்து கொண்டார் (அது மீடியாக்களுக்கு தெரியாத விசயம் அதனால் பிரபலபடுத்தவில்லை) ஆச்சிரியம் இன்னும் அந்த ஆர்வம், அந்த படைப்புக்காக நானும் காத்திருப்பேன் .
நான்:-சார் கடைசியா என்ன படம் பார்த்திங்க?
பாலுமகேந்திரா:-அங்காடி தெரு படம் தான் பார்த்தேன் அந்த தீம் மிக அருமை, கதை வேறு தீம் வேறு வெளியூரில் இருந்து பிழைக்க வரும் இளைஞர்கள் பற்றிய ஒரு தீம் தேர்வு செய்தது ,சரி ஆனால் அந்த கதை மற்றும் கதாபாத்திர வடிவமைப்பின் சில நிறை குறைகளை பகிர்ந்து கொண்டார். என்ன ஒரு ஆழமான விமர்சனம்.
நான்:-இப்ப நல்ல படங்களுக்கு திரைஅரங்கு கிடைக்குறதில நெறைய பிரச்சனைகள் இருக்கே ?
பாலுமகேந்திரா:- எஸ். நம்ம சினிமா இப்ப மோனோபோலி ஆயிடுச்சு. நா அதனால தான் என் மாணவர்களுக்கு உலக சந்தைய பார்க்க சொல்றேன். ஒரு ஜப்பான் படமோ, கொரிய படமோ, இந்திய ரசிகர்கள் வெறும் சப்-டைட்டில் துணையா வச்சு விரும்பி தேடி தேடி பார்க்குறோமே, நம்ம படங்கள அவங்கள பார்க்க வைக்க வேண்டாமா? எப்பவும் ஒரு மாற்று
வழி இருக்கும் சோ அத பாருங்க அப்புடினார்! வாவ் ! தட்ஸ் மாஸ்டர்….
நான்:-உங்க சினிமா பட்டறை பற்றி?
பாலுமகேந்திரா:- சாகுற வரைக்கும் சினிமால இருக்கணும்,சினிமாவுக்கு எதாவது செய்துட்டு போகணும், அதனால ஆரம்பிச்சதுதான் இந்த ஸ்கூல் வீடு படத்துக்காக பாதி கட்டி முடிச்ச வீடு இது, மறுபடியும்ல தொடர்ந்து முதல் மாடி கட்டினேன், அப்புறம் முழுசா முடிச்சு என்னோட கதை நேரம் படப்பிடிப்பு ரெண்டுமுனு நடந்துது,அப்புறம் renovate பண்ணி இங்க இத ஆரம்பிச்சிட்டேன்.இங்க தமிழ் வழி கல்வி தான், ஒரு வருஷத்துக்கு 12 பேர் தான் " எழுத்து-இயக்கம்-ஒளிப்பதிவு-படத்தொகுப்பு " எல்லாமே கத்து கொடுத்து ஒரு creatorah உருவாக்கணும் அதான் என் ஆசை இங்க இருக்குற 12 பேர் கூ ட நா நெருங்கி பழகுறேன் அதனால அவங்கல நா நல்ல கலைஞர்களா உருவாக்க முடியும். நெறைய பேர் சேர்காததற்க்கு இதுவும் ஒரு காரணம்.அதே மாதிரி இங்க சான்றிதழும் கிடையாது.அவர்கள் வொர்க் தான் பேசும்.
நான்:-சார் எங்க தொலைகாட்சிக்காக ஒரு நேர்காணல் தர முடியுமா ?
பாலுமகேந்திரா:-இப்ப வேண்டாமே எல்லாம் பேசி பேசி சலிச்சுபோச்சு அப்புறம் ஒரு நாள் கண்டிப்பா தரேன்னு சொன்னார்.
எங்க நாம விட்ருவோமா இவ்ளோ நேரம் பேசினதே ஒரு குட்டி நேர்காணல் தான??? என்ன நான் சொல்றது !!!!!!!!!!!!!!
என்ன ஒரு பிளான்னிங் இதுதான் legends “டீ தீர்ந்து போச்சு இது என் மைன்ட் வாய்ஸ்” அவர் தற்பொழுது தான் புதிதாக அவர் அழைபேசி உபோயிக்க தொடங்கியிருந்ததார். அவர் ரசிகை ஒருவர் கொடுத்ததால் மட்டுமே அதை பயன்படுத்தி வந்தார்.அவர் கையாலேயே என் அழைபேசி என்னையும் வாங்கி எழுதி வைத்து கொண்டார்.வாங்க சுத்தி காட்டுறேன்னு சொல்லி இரண்டு மாடிகளிலும் ஒவ்வொரு அறையா அவர் விளக்கி சொல்ல பின்னாடியே நாங்க போனோம்.அவர் வீடு முழுக்க உலக திரைப்படங்களின் ஜாம்பவான்கள் ஸ்டீபன் ஸ்பீல்பெர்க்,சத்யஜித் ரே,புகைப்படங்கள். பாலுமகேந்திரா படத்தின் கதாநாயகர்கள் கதாநாயகிகள்,அவர் படத்தின் வொர்க்கிங் ஸ்டில்ஸ்,என எல்லாமே கருப்பு வண்ண புகைப்படங்கள் தான், அழகாக போட்ரைட் செய்யப்பட்டது. அந்த “சினிமா பட்டறை” முழுக்க ஒரு புகைப்பட அருங்காட்சியகம் போல் ஜொலித்தது.
கடைசியில தயங்கிக்கிட்டே உங்க கூட ஒரு புகைப்படம் எடுத்துக்கலாமானு கேட்டேன். கேமரா வச்சுருக்கிங்களானு? கேட்டார், நா நண்பர் கிட்ட வாங்கி கொண்டு வந்திருந்த ஒரு ஹன்டி காம எடுத்து காட்டினேன். உடனே என்ன நெனைச்சாரோ அவர் உதவியாளர கூப்பிடார். ஒரு ஸ்டில் கேமரா வந்துச்சு. வெளிய போலோமனு கேட்டார் சரின்னு தலையாட்டுனேன் நாங்க முனு பேரு நின்னோம் என்ன மட்டும் தனியா நிக்க வச்சு அவர் கையாள டயிட் குளோசப்ல ஒரு போட்டோ எடுத்தார். அவர் கையாள எடுக்கிற திரைப்படம்ல நடிக்க கிடைக்காத வாய்ப்பு நிழற்படத்திளியாவது கிடைச்சது, எனக்கு ரொம்ப சந்தோசம்,அப்புறம் எல்லோரும் சேர்ந்து அவரோட உதவியாளர் எடுக்க போறார் ஒரு படம் “முடிஞ்ச வரைக்கும் டயிட் ஷாட்ல எடு” அப்புடின்னு சொன்னார்.அதான் பாலுமகேந்திரா.
கிளிக் “ஒரு சந்தோஷ நிமிடம் பதிவானது”
இடமிருந்து வலம்- 1 - முன் பதிவுகளில் அறிமுகப்படுத்திய திரு.பிரசாத் (இந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளரும் கூட), 2 -நண்பர் ராஜா, 3 - திரு.பாலுமகேந்திரா , 4 - நானே தான் …
கை குடுத்து வழி அனுப்பி வச்சார். “என் வாழ்நாளில் எனக்கு இன்று ஏற்பட்டது போன்ற ஒரு பெருமித உணர்வை இன்னொரு நபருக்கு ஒருநாள் என்னிடம் ஏற்படச் செய்ய வேண்டும்.அதற்காக உழைக்க தொடங்க வேண்டும் என்கிற அணையா கனவோடு நான் வெளியேறினேன்”.
GOLDEN DAYS NEVER COME AGAIN»»»»»»»»»»»»»»»»»»>
எந்த ஒரு கலையும் அடுத்த தளத்திற்கு செல்வது அதன் நிகழ்கால பயணிகளின் கையில் தான் இருக்கிறது. ஒய்வு பெரும் வயதிலும் ஓயாத கனவுகளோடும்,கற்பனைகளோடும் திரு.பாலுமகேந்திரா நிகழ்த்தி வரும் இது போன்ற முயற்சிகளை ஒவ்வொரு நல்ல கலைஞர்களும் பின்பற்ற தொடங்கினால் தமிழும், தமிழர்களும் உலக அரங்கில் தனிஇடம் பெறுவது நிச்சயம்.
“கலை மனிதர்களுக்காக வளரட்டும்” “மனிதர்களிடம் மனிதம் வளரட்டும்”
ஆம்!!! ஒரு வெகுதூர பயணத்திற்கு தேவையான மிகப்பெரிய மாற்றமும்,ஊக்கமும்
நம் மண்ணிலும், நம் மனதிலும் தொடக்கமாகி விட்டது, என்ற நம்பிக்கையோடு நிறைவு செய்கிறேன்…
இன்னும் பல நாயகர்கள் வலம் வருவார்கள்…..
மு.வெ.ரா
26-10-10
பின்னூட்டம்:-நாள்-27-10-10
இன்று காலை 11 மணி ஒரு புது எண்ணிலிருந்து அழைப்பு யாரென்று ஹலோ சொன்னால் எதிர்முனையில் வெங்கட் நான் பாலுமகேந்திரா பேசுறேன்.. ஒரு நிமிஷம் ஷாக் அப்புறம் சந்தோசம் யார் போன் பண்ணினாலும் அமைதியா பேசுற நான் இவரோட குரல் கேட்டதும் ரொம்ப பணிவாதான் பேச ஆரம்பிச்சேன், அதே நேரத்தில நல்ல பழகின ஒரு நபர்கிட பேசுற மாதிரி ஒரு பீலிங்.அவர் அந்த குறும்படங்கள பத்தி புகழ்ந்து தள்ளிட்டார்.எங்க அலுவலக்த்தில நடக்கிற விழாவுக்கும் வரேன்னு சொல்லிட்டார்.ஹாப்பி அந்த விவரங்கள் விரைவில்»»»»»»»>